நாட்டில் மீண்டும் அமுலானது அவசரகால சட்டம்!

695shares

இலங்கையில் அவசர கால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதம் நீடிப்பது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வந்தது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அதன் கட்டளை சட்டத்தின் இரண்டாம் பகுதியின் விதிகள் நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டும் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவசரகால சட்டம் அமுல்ப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க