மானிப்பாயில் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இன்று பொலிஸாரின் வேட்டையில் சிக்கியவர்கள்!

948shares

மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

கைதான மூவரில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.

இருப்பினும் சம்பவ தினத்தன்று கொல்லப்பட்ட இளைஞனுடன் பயணித்தவர்கள் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க