திருகோணமலைக்கு சுற்றுலா சென்றிருந்த வவுனியா இளைஞர்கள் பலியான சோகம்!

654shares

குச்சவெளி கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி இன்று மாலை மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த கடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் என சுற்றுலா சென்றவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது மாணவன் உட்பட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அங்கு நின்றவர்கள் குறித்த இருவரையும் மீட்க முயன்ற போதும் அது பயனளிக்காத நிலையில் குறித்த இருவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஐங்கரன் (வயது 20) மற்றும் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவனான உ.கிசாளன் (வயது 16) ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்த இருவரது சடலங்களும் நிலாவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை நிலாவெளிப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க