ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கருணா; வெளியானது புகைப்படம்!

487shares

இன்று பிற்பகல் 3 மணிக்கு (சற்று முன்) சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தொடர்புடைய அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், மஹிந்தவின் குடும்பத்தாரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சித் தலைவர் பொறுப்பை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் குறித்த மாநாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா ) உள்ளிட்ட மஹிந்த ஆதரவு தமிழ் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க