கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கும் அவரை ஏற்ற வந்தவருக்கும் ஏற்பட்டநிலை!

2458shares

ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சென்னையிலிருந்து ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்த கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த மஹ்ரூப் மொகமட் (வயது 33 ) என்பவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.45 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இரண்டாவது சந்தேகநபரான மாத்தளையில் வசிக்கும் மொகமட் தமீர்(வயது 24 ) என்பவர், கைது செய்யப்பட்ட முதலாவது நபரை ஏற்றிச் செல்வதற்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டதுடன் வானொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் நீரிகொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை இருவரையும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கடத்தலின் பிரதான நபர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.அவர் ஒரு வர்த்தகர் எனவும் மாத்தளையில் வசிப்பவரெனவும் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க