யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தென்னிந்திய பிரபல தமிழ் நடிகை!

2178shares

அண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகின்றமை அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணமாகவே அதிகமானவர்கள் வருகைத்தந்துள்ளனர்.

ஆனால் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். அவரைப் பார்த்தால் ஒரு ஆன்மீக பயணமாகவே இலங்கை வந்திருப்பதாக தெரிகின்றது.

நடிகை சுகன்யா யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஆலய நிர்வாகத்தினால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க