நான் முதலமைச்சராக இருந்த போது இப்படி நடந்ததே இல்லை! விளாசும் முள்ளாள் முதலமைச்சர் (இன்றைய முக்கிய செய்திகள்)

  • Jesi
  • August 13, 2019
20shares

நாட்டுக்குத் தற்போதைய தேவை புதிய அரசியலமைப்பேயன்றி ஜனாதிபதி தேர்தல் அல்லவென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தழிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்பொழுதும் தடை இருக்கின்றது.

அநியாயமான வேண்டுகோள்களை நாங்கள் விடுக்கவில்லை. அவர்களுக்குரியதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இது நியாயமானது. என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

யுத்தத்தால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படத்தி வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் உட்பட 60 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்சவின் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது போன்ற செய்திகளோடு இன்றைய முக்கிய செய்திகள் அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க