ஓகஸ்ட் இறுதிப்பகுதியிலிருந்து பலாலி விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

70shares

பலாலி விமான நிலையத்திலிருந்து ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியிலிருந்து விமான சேவை ஆரம்பிக்கப்படுமென சிவில் விமான சேவைகள் அதிகாரசபைத் தலைவர் நிமல்சிறி தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாத்துறை முதன்முறையாக விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிதியளிக்கிறது.இதன்படி இலங்கை உல்லாச பயணத்துறை ரூபா 1050 மில்லியனும், சிவில் விமானசேவைகள் அதிகாரசபை ரூபா 900 மில்லியனும் மற்றும் இந்திய அரசாங்கம் 02 மில். அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளன.

விமானநிலைய அபிவிருத்திக்காக தம்மிடம் நிதி இல்லை என தெரிவித்து உல்லாச பயணத்துறையின் நிதியை அபிவிருத்திக்கு ஒதுக்கியதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி 80 இருக்கைகளை கொண்டதாக இந்திய ஏர்லைன்ஸ் ATR72 அல்லது Q400 ரக விமானங்கள் நாளொன்றுக்கு இரண்டு விமானசேவைகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.

எனினும் வாரத்துக்கு நான்கு விமான சேவைகளை நடத்த இந்திய ஏர்லைன்ஸ் தீர்மானித்தபோதிலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்பட்வில்லை.

அவர்களின் கோரிக்கையை நாம் இன்னமும் பார்க்கவில்லை. பலாலியிலிருந்து இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்வது பொருளாதாரரீதியாக நன்மை பயக்கவல்லது என நிமல்சிறி தெரிவித்தார்.

புனரமைக்கப்படும் விமானநிலையத்திலிருந்து ஒருபகுதி பொதுமக்களுக்கும் மற்றயபகுதி படைத்தரப்பும் குறிப்பாக விமானப்படையும் பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டநாள் திட்டத்தில் பலாலியிலிருந்து 150 இருக்கைகளைக் கொண்ட A320 மற்றும் A321 விமானங்கள் இயக்கப்படுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க