தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள தலைவர்கள் புறமொதுக்கினால் பாரிய பிரச்சினைகளை சந்திக்கநேரிடும்!

35shares

சிங்கள தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை தேடி பார்க்காவிடின், எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் சிங்கள தலைவர்கள் தேடி பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

13 ஆவது அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகல சரத்துக்களையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். காலை 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பில் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்த அமைச்சர் காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைத்தார்.

வடக்கையும் கிழக்கையும் எல் வலயமாக இணைத்து தென்னை பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு இடம்பெற்ற இந்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தென்னை பயிர்ச்செய்கைக்கான மானிய தொகை வழங்கி வைக்கப்பட்ட்து

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதையும் தவறாமல் படிங்க