சரியான வேட்பாளரை களமிறக்கியுள்ளது மொட்டு! ஐ.தே.கவை எச்சரிக்கிறார் பொன்சேகா!

39shares

தற்போது நாடு முககொடுத்துள்ள நிலைமையில் கோட்டாபயவுக்கு கிராக்கி வந்தது அதனை அறிந்துகொண்டு மொட்டு கட்சி சரியான ஒரு வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளது என முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் சரி பிழை பற்றி நான் இங்கு கதைக்க விரும்பவில்லை ஆனால் நாட்டின் சமகால பிரச்சினைகளை புரிந்துகொண்டே அவரை களமிறக்கியுள்ளனர். இதனை புரிந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியும் நல்ல ஒரு வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும்.

நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஒன்று உள்ளது.நாட்டு மக்கள் பாதுகாப்பு தொடர்பிலேயே முன்னுரிமை வழங்குகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க