விடுமுறையில் வீடு சென்ற இராணுவ வீரரருக்கு ஏற்பட்ட கதி!

21shares

விடுமுறையில் வீடு சென்ற இராணுவ வீரர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவ இராணுவ முகாமில் கடமையாற்றும் வெலிமட, கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசித்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டை கலைப்பதற்காக நேற்று (12) இரவு 7 மணி அளவில் மரத்தில் ஏறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க