நவீனமயமாகிறது புகையிரதசேவை- சீனாவிலிருந்து வந்தன அதி நவீன இயந்திரங்கள் மற்றும் பெட்டிகள்

39shares

புகையிரத சேவையை நவீனமயமாக்கும் வகையில் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அதி நவீன எஸ் - 14 ரக புகையிரத பெட்டிகள் இன்றையதினம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட இந்த புகையிரத பெட்டிகளின் பெறுமதி 10.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

வந்து சேர்ந்த புகையிரத பெட்டிகளுடன் அதி நவீன எஸ் - 14 இயந்திரங்கள் இரண்டும் காணப்படுகின்றன. அத்துடன் இரண்டாம் வகுப்புக்காக குளிரூட்டப்பட்ட இரண்டு புகையிரத பெட்டிகளும், மூன்றாம் வகுப்புக்காக மூன்று புகையிரத பெட்டிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும் உணவு அறையொன்றும் இந்த புகையிரதத்தில் உள்ளடங்குகின்றது. எதிர்வரும் நாட்களில் இதனை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எட்டு புகையிரதங்கள் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும். அவற்றில் குளிரூட்டப்பட்ட புகையிரத பெட்டிகள் நான்கு உள்ளிட்ட 7 பெட்டிகள் காணப்படும். இவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி