வவுனியாவில் சிறுவனின் பரிதாபகர மரணத்தால் கிராமமே சோகத்தில்!

52shares

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணி கழுத்தில் இறுகியதால் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (08) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில், குறித்த 08 வயதுச் சிறுவன், தனது 05 வயதுச் சகோதரனுடன் சல்வார் தாவணியை யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதன்போது, குறித்த தாவணி 08 வயதுச் சிறுவனின் கழுத்தில் இறுகியதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

சல்வார் தாவணி இறுகியதைக் கண்ட05 வயதுச்சகோதரன்,கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பலனளிக்கவில்லை.

குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க