100 பில்லியனை சேமிக்க அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி போடுகிறது நிதியமைச்சு!

24shares

தேவையற்ற செலவினங்களை 15 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சு அனைத்து அமைச்சர்களுக்கும் தெரிவிக்கவுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் இந்த வருடம் அரசாங்கத்துக்கு ரூ .100 பில்லியனை மிச்சப்படுத்தப்படும் என்று அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், வாகனங்கள் கொள்வனவு, முதலீட்டாளர்கள் இல்லாமல் பல மில்லியன் டொலர் திட்டங்களுக்கு திறைசேரி நிதியை பெற்றுக்கொள்ள முயல்வது போன்ற விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க