பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருங்கள்; நீரில் மூழ்கும் அபாயத்தில் சில பிரதேசங்கள்!

286shares

அதிக மழை காரணமாக களு, கிங் மற்றும் களனி கங்கைகளின் நீர்மட்டம் அபாய நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக களு கங்கையின் காரணமாக இரத்தினபுரி, தவலம பிரதேசங்களும், களனி கங்கையின் காரணமாக தெரணியகல மற்றும் கிதுல்கல பிரதேசங்களும் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் அதிக மழையுடனான வானிலையால் நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க