மடுவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்; பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு; தற்போதையை நிலை என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்!

257shares

மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்ற போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்துக்கு வருகை தந்துள்ளனர்.

பொலிஸ், இராணுவம், கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (14) மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது, அதனை தொடர்ந்து நாளை (15) காலை சுமார் 6.30 மணியளவில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் விபரிக்கிறது இந்த காணொளி..

இதையும் தவறாமல் படிங்க