செஞ்சோலை படுகொலை அஞ்சலி நிகழ்வு மற்றும் நினைவுத்தூபி திறப்பு விழாவில் பெருமளவான உறவுகள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி!

38shares

கடந்த 2006 ஆம் ஆண்டு இதே நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று காலை வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையார் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார் தொடர்ந்து பொது திருவுருவப்படத்துக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது

தொடர்ந்து இந்த மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது

வன்னிகுறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், இன உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க