வவுனியா தாண்டிக்குளத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பரபரப்பு! குவிந்தனர் மக்கள்!

37shares

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய தனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதுடன் வாகனநெரிசலும் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று காலை தாண்டிக்குளம் இராணுவ உணவகத்துக்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது. வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுக்குள் சென்று ஒழிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுக்கும் நோக்குடன் உணவகத்துக்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நின்ற ஒருவர் நாகபாம்பினை கையினால் பிடித்து அதனை வெளியில் எடுத்து ஆலயத்தில் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்ததுடன் எ9 வீதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க