இலங்கையில் கணவனின் கொடூர தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நியூஸிலாந்தில் அடித்த அதிஸ்ரம்!

988shares

இலங்கையில் கணவனால் தனது மகன் முன்பாகவே சித்திரவதைக்கு உள்ளான பெண்ணுக்கு நியூஸிலாந்து அகதி அந்தஸ்தை அளித்துள்ளது.

முன்னதாக குறித்தபெண் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்திருந்த போதிலும் அது அதிகாரி ஒருவரால் நிராகரிக்கபபட்டது. எனினும் குறித்தபெண் இந்த விண்ணப்பத்தை கடந்த ஜூன் மாதம் ஒக்லாந்திலுள்ள குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்துக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவரின் நிலை உணர்ந்து அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் வெளியிடப்பட்ட தீர்ப்பில், 39 வயதான பெண் மற்றும் அவரது 12 வயது மகன் இருவரும் அவர்கள் பிறந்த நாடான இலங்கைக்கு திரும்பினால் துன்புறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டதிலிருந்து பெண்ணின் கணவர் தொடர்ந்து அவரை அடித்து, பாலியல் பலாத்காரம் செய்து, வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் கேள்விப்பட்டது.

அத்துடன் அந்த பெண்ணை துன்புறுத்தி வீதியில் கணவர் இழுத்து சென்றார். அவரது மண்டை ஓட்டில் பெரிய காயம் உள்ளதையும் அவருக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்பட்டதையும் தீர்ப்பாயம் தெரிந்திருந்தது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கணவர் தன்னை கொன்று விடுவார் என அந்த பெண் முடிவெடுத்தார். எனவே அவரிடமிருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்தார். எனவே அவரும் மகனும் 2017 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் நியூசிலாந்து சென்றனர். அங்கு தனக்கும் தன் மகனுக்கும் ஆதரவாக வேலை கிடைக்கும் என்று அவர் நம்பினார்.

அவருக்கு வேலை வழங்கப்பட்ட போதிலும், குடிவரவு நியூசிலாந்து வேலை விசாவுக்கான விண்ணப்பத்தை மறுத்துவிட்டது, ஏனெனில் "அவர் தகுதியானவர் என்று கருதப்படவில்லை".

அவர் இலங்கை சமூகத்தின் மற்றொரு உறுப்பினரிடமிருந்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர் ஒரு கற்கைநெறியை தொடர அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அந்தப் பெண் முதன்முறையாக உளவியல் ஆதரவை பெறமுடிந்தது.

தனது கணவர் கண்டுபிடிப்பார் என்று அச்சமடைந்ததால் , துஷ்பிரயோகம் குறித்து இலங்கையில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு அந்த பெண் மிகவும் பயந்ததாக தீர்ப்பாயம் கேள்விப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மற்றய குடும்ப உறுப்பினர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் வழக்குகளிலிருந்து அவரது கணவர் தப்பினார்.

அந்த நபர் தனது மனைவிக்கு இலங்கைக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்று தெரிந்ததும் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

தீர்ப்பாயம் அந்த பெண்ணின் ஆதாரங்களை நம்பத்தகுந்ததாகக் கண்டறிந்ததுடன், திருமண பாலியல் வல்லுறவு சட்டபூர்வமாக இலங்கைக்குத் திரும்பினால், அவரும் அவரது மகனும் "கடுமையான தீங்கு விளைவிக்கும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்" என்று கண்டறிந்தது.

இவர்கள் இருவரையும் அகதிகள் என ஏற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்று அது முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க