தமிழர்களை நசுக்கும் பேரினவாதத்திற்கு எதிராக போராடவேண்டிவரும் - தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு எச்சரிக்கை!

26shares

தமிழர்களுக்கு எத்தனை இல்லைகள்?

01.தனித் தமிழீழம் - இல்லை

02.இணைந்த வடக்கு கிழக்கு - இல்லை

03.மாகாண சுய ஆட்சி - இல்லை

04.சமஷ்டி ஆட்சி - இல்லை

05.13 - இல்லை

06.13+ உம் இல்லை

07.பொலிஸ் அதிகாரம் - இல்லை

08.காணி அதிகாரம் - இல்லை

09.காணாமல் போனவர்களுக்கு முடிவு - இல்லை

10.கைதிகள் விடுவிப்பு - இல்லை

11.காணி விடுவிப்பும் - இல்லை

12.கல்முனைக்கும் முடிவுமில்லை

இப்படி எத்தனையோ இல்லைகள் இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது?

தமிழினத்தின் கருவறுத்து தமிழர்களின் உடல்களை நாய்களும் நரிகளும் தின்ன வைத்து தமிழ் மங்கைகளின் மானத்தை பந்தாடி தமிழினத்தையே தெருவிற்கு இழுத்து வந்த கொடுங் கோலன் கோத்தாவையா?

முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்திய அளவில் கடுகளவேனும் தமிழர்கள் விடயத்தில் ரணில் அரசு அக்கறை காட்டவில்லை.

ஆட்சிப் படி ஏற தமிழர்களை ஏணியாகவும் நம்பிக்கையில்லா வாக்களிப்பில் தத்தளித்த போது தமிழ் அரசியல்வாதிகளை தோணியாக பாவித்து விட்டு கறிவேப்பிலை போன்று தமிழர்களை தூக்கி வீசிய ரணிலையா ?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து தமிழர்களை நசுக்கியும் ஏமாற்றியும் வரும் சிங்கள பேரினவாதத்திற்கு சரியான பதிலடி கொடுக்க தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி வரும்.

- தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு-

இதையும் தவறாமல் படிங்க