நீண்ட நேரமாகியும் வீடு வராத கணவர்! கணவனின் சடலத்தை கண்டு கதறும் மனைவி!

194shares

விலங்குகளிற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று மாலை செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நேரமாகியும் தனது கணவர் வீடு வராததால் சந்தேகமடைந்த மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இதன் போது அரசடிக்குளம் காட்டுப்பகுதியில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் அரசடிக்குளத்தை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே பலியாகியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க