"என்ர செல்லம் என்னையும் கெதியா கூட்டிக்கொண்டு போ" - தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க கதறி அழுத தாய்!

43shares

சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று காலை வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையார் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்திய தாய் ஒருவர் "என்ர செல்லம் என்னையும் கெதியா கூட்டிக்கொண்டு போ, வருத்தம் தாங்க முடியல என்னையும் கெதியா கூட்டிக்கொண்டு போ" என கண்ணீர் மல்க கதறி அழுதமை அனைவரது கண்களையும் கலங்கை வைத்துள்ளது.

ஐபிசி தமிழின் இன்றை பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான காணொளி...

இதையும் தவறாமல் படிங்க