மீன்பிடிக்க சென்றவரை அதிர்ச்சியில் உறைய வைத்த காட்சி; தீவிர விசாரணையில் பொலிசார்!

520shares

காசல் ரீ நீர் தேக்கத்திற்கு நீர் எந்திசெல்லும் டிக்கோயா ஆறு சென்று இணையும் காசல் ரீ நீர்தேக்கத்தில் ஆண் சிசு ஒன்று மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் இன்று காலை 10 மணியளவில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல் ரீ நீர் தேக்கத்தில் குறித்த சிசு மிதந்து கொண்டு இருப்பதை மீன்பிடித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சடலமாக மீட்கப்பட்ட சிசு பிறந்த நிலையில் சடலமாக மீட்கபட்டதாகவும் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலைமையில் மரணவிசாரணைகள் இடம்பெற்றவுடன் சிசுவின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லபட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்