ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்?; வெளியானது புதிய தகவல்!

602shares

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணிலுக்கு ஆதரவானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் சஜித்தின் ஆதரவு வட்டாரங்கள் இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதன்படி கட்சித் தலைமை, பிரதமர் வேட்பாளராக ரணில் போட்டியிடுவது,உருவாக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை ஐக்கியதேசியக்கட்சிக்கு வழங்குவது மற்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவது ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும்.

இந்த நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இன்றையதினம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் கூடி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தகவல் தருகையில்

சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.இது தொடர்பில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியை உருவாக்கத்துக்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.எனினும் பொதுச் செயலாளர் பதவி குறித்து இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்குதல் தொடர்பான இறுதி முடிவு,ஒப்பந்தம் கைச்சாத்திடுதல் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு என்பன விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்