யாழ் மக்களுக்கு பேரிடியாக விழுந்த ரணிலின் அறிவிப்பு?!

1800shares

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மயிலிட்டி துறைமுகத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமானநிலையங்களை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இரண்டு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும்.

பலாலி ஒரு பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வடக்கில் ஒரு படகுச் சேவையை அறிமுகப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக வேறு பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் ரூ .14 பில்லியனை ஒதுக்கியுள்ளது. வடக்கு மாணவர்களுக்கும் ரப் கணனிகள் வழங்கப்படும். வடக்கின் கல்விநிலையை உயர்த்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

எனது குழந்தை பருவத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்கியது. ஆனால் போரின் காரணமாக அது அந்த அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையை மீண்டும் மீட்டெடுப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

வடக்கில் மேலும் 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும். யுத்தம் முடிவடைந்ததிலிருந்து 2009 முதல் இன்றுவரை மொத்தம் 80,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் முன்னிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை .சேனாதிராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்