இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்?; மைத்திரியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து போயுள்ள கொழும்பு!

678shares

இந்த நாட்டு பொதுமக்களின் அபிலாஷைகளை அறிந்த நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்ணித்துள்ளார்.

“அனைவருக்கும் நிழல் உதா கம்மான” செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் மூன்று கிராமங்கள் இனறு பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதஸவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.

திம்புலாகலவில் நிர்மாணிக்கப்பட்டசொரிவில கொடராகலகம , தளுகாணேயில் நிர்மாணிக்கப்பட்ட ஜீவஹத்தகம மற்றும் திசாலாகம ஆகிய கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

66 வீடுகள் 691 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என இதுவரை அறிவிக்கப்படாத போதும், சஜித்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கூடுதலாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் சஜித்தும் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போவதாக கூறி வருகின்றார்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித் பிரேமதாசவை புகழ்ந்து கூறியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி