ஆவா குழு விடுத்த கடும் எச்சரிக்கை; யாழ் விடுதியில் அரங்கேறிய அராஜகம்!

1008shares

கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு குறித்த விடுதிக்குள் புகுந்த சிலரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டும் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாள் வெட்டுச் சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் சிறு காயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் புதிதாக விடுதி ஒன்று திறக்கப்பட்டது. குறித்த விடுதியில் சமூக சீர்கோடுகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தி, அவ்விடுதியினை மூடுமாறு எச்சரிக்கை செய்து ஆவா குழு என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த விடுதி உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் குறித்த விடுதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.

மேலும் பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி