இன்று நடைபெற்ற வவுனியா மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் பாிசளிப்பு விழா.

41shares

வவுனியா மாவட்ட அறநெறி ஒன்றியத்தின் பாிசளிப்பு விழாவும் வறிய அறநெறி மாணவா்களுக்கான உதவுங்கரங்களின் நிகழ்வும் இன்று வவுனியா,சாம்பல்தோட்டம், ஸ்ரீ சாயி சரவண கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில்,

பிரதம விருந்தினராக சமூக செயற்பாடடாளர் திருமதி. சாந்தகெளாி சண்முகநாதனும், சிறப்பு விருந்தினராக இந்து கலாசார உத்தியோகத்தா் பிரம்மஸ்ரீ.எஸ்.குகனேஸ்வரசா்மாவும், கெளரவ விருந்தினா்களாக திரு.ஆ.கோடீஸ்வரன், திருமதி.ஆ.திருச்செல்வி, செல்வி.சி.சுஜித்தா ஆகியோர் பங்குபற்றினர்.

நிகழ்வில் அறநெறி ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட பண்டிகைக் கால மாவட்ட கலாசாரப் போட்டிகளுக்கான சான்றிதழ்களும் பாிசளிப்புக்களும் 100 மாணவா்களுக்கு வழங்கப்பட்டத்தோடு வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வறிய 250 அறநெறி மாணவா்களுக்கு, ஒரு வருடத்துக்கு தேவையான அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இதையும் தவறாமல் படிங்க