ஐ.தே.கட்சிக்குள் பலமான நால்வர் இருக்கின்றார்கள்; அதில் யார் அந்த ஒருவர்?

141shares

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான 4 பேர் இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவர்களில் ஒருவர் களமிறக்கப்படுவார் எனவும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஹேஷா விதானகே, சமிந்த விஜயசிறி, பாலித ரங்கே பண்டார மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.

தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானதாகும்.

எங்களின் வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள். கட்சியின் இறுதித் தீர்மானத்துக்கு அமைய சரியான நேரத்தில் வேட்பாளரை அறிவித்து வெற்றியை நிலைநாட்டுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் இருக்கிறார்கள்.

இவர்களில் யார் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டாலும் நிச்சயமாக அவர்களின் வெற்றிக்கு எங்களின் ஆதரவு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க