நீண்ட காலமாக “S.T.F.விகீ” செய்து வந்த மோசமான செயல்; மடக்கிப்பிடித்த பொலிஸார்!

82shares

குளியாபிட்டி - கிரிவுள்ள பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் என தன்னை அடையாளப்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 'எஸ்.டீ.எப்.விகீ" என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிவுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 'எஸ்.டீ.எப்.விகீ" எனப்படும் விக்ரமரத்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 50 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் பொலிஸ் விசேட அதிரடிப்டையில் பணிபுரிந்துள்ள சந்தேக நபர் பின்னர் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது பதவிகாலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி சிக்கலின்றி பல இடங்களுக்கும் சென்று போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

பொலிஸார் சந்தேகநபரை குளியாபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இதன்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி