ஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி!

504shares

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அதிகளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவரை இரும்புப் பெண் எனவும் பலரும் அழைத்தனர்.

இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பிரதி சொலிசிஸ்டர் நாயகம் பதவியில் இருந்து நேற்று முன்தினம் இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கை மாற்று அணியின் ஜனாதிபதி வேட்பாளராக டில்ருக்ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்