புலனாய்வு பிரிவின் துரித செயற்பாடு! சிக்கினார் மற்றுமோர் சகா!

323shares

அரச புலனாய்வு பிரிவின் அம்பாறை அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவராக செயற்பட்ட ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் நுவரெலியா முகாமில் பயிற்சி பெற்றுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். ´அபு இக்ரிமா´ எனப்படும் மொஹமட் ரஃபைடீன் மொஹமட் அலி என்ற இந்த சந்தேகநபர் வடதெனிய, வெலங்பொட, கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அம்பாறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக இதுவரை 16 பேர் அம்பாறை பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க