பெண் வைத்தியருக்கு நேர்ந்த கதி : சிக்கினார் இளம்குடும்பஸ்தர்!

355shares

திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் 34 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கோமரங்கடவல வைத்தியசாலையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர் பெண் வைத்தியர் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள பழைய மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்காக அப்பகுதியை காண்பிக்குமாறு, பெண் வைத்தியரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெண் வைத்தியர் ஒப்பந்தகாரர் உடன் சென்று அப்பகுதியை காண்பித்த போது வைத்தியரை பலாத்காரமாக அரவணைத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டையடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய குடும்பஸ்தரை கைது செய்துள்ளதாகவும் அவரை நாளைய (23) தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி