வவுனியாவில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கோர விபத்து; 9 பேர் படுகாயம்!

364shares

வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியாலங்குளம் பகுதியில் இன்று காலை 7.40 மணியளவில் ஹயஸ் ரக வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வான் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த வானில் 11 பேர் பயணித்த நிலையில் 9 பேர் படுகாயமடைந்து செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க