ஏழ்மையில் வாழும் ஈழத்து பெண்ணை 11 வருடங்களாக ஏமாற்றிவரும் கனடா வாழ் புலம்பெயர் இளைஞன்; நடந்தது என்ன?!

2364shares

கனடாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த நெல்சன் பெர்னாண்டோ ராகல் என்ற இளைஞன் மன்னாரை சேர்ந்த பெண்ணொருவரை பலவருடங்களாக ஏமாற்றி வரும் சம்பவமொன்று வெளிச்சத்திற்குவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சானை சேர்ந்த பெண்ணொருவருக்கும், புலம்பெயர்ந்து கனடா ரொறொன்ரோ ஒன்டாரியோ பகுதியில் வசித்துவரும் நெல்சன் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு பெண் வீட்டாரின் செலவில் இரு வீட்டாரும் இணைந்து இந்தியாவில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் பெண்ணை இந்தியாவிலேயே சில மாதங்கள் வசிக்குமாறும், தான் கனடா சென்ற பின்னர் உங்களை கனடாவிற்கு அழைத்து செல்வதாகவும் சொல்லிவிட்டு குறித்த இளைஞன் கனடாவுக்கு சென்றுவிட்டார்.

தொடர்ந்து பலமாதங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டதாகவும், வரும் மாதம் உங்களை கனடாவிற்கு அழைத்து செல்வேன் என ஒவ்வொரு மாதமும் கூறி கூறி 8 வருடங்கள் கடந்து சென்றது.

அதுவரை 8 வருடகாலமாக அந்த பெண் இந்தியாவில் வசிப்பதற்கான செலவை கணவனை இழந்த அவருடைய தாய்தான் பார்த்துக்கொண்டார். இனியும் நீ இந்தியாவில் இருக்க வேண்டாம் ஊருக்கு திரும்பி வா என குறித்த பெண்ணை அவருடைய தாய் மடுவிற்கு வரவழைத்து 3 வருடங்களாக வீட்டில் வைத்து பார்த்து வருகிறார்.

கனடாவில் வசிக்கும் அந்த கணவனோ எப்பொழுதாவது ஒரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவந்த நிலையில், கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அவரது உறவினர் தொலைபேசியில் குறித்த பெண்ணிடம் தொடர்புகொண்டு நீ நெல்சனை விவாகரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தார் செய்வதறியாது சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் தாம் இனி என்ன செய்வது என்று தெரியாமல் நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், எனது பெண்ணுக்கு நடந்த அநீதியை பெண்ணின் உறவுகளாக நான் நம்பும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தட்டிகேட்க வேண்டுமெனவும் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க