குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை! பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட முக்கிய அமைச்சர்!

31shares
Image

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பாரிய குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை தொடர்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின’ நீதித்துறை, பொலிஸ் மற்றும் சிறைச்சாலை என்பன நிறுவனமயப்பட்டு செயற்பாடுகளை முன்னெடுக்காத வரை சட்டம் ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் தெரிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க