இலங்கையில் முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11 மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் !

159shares

பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று (28) சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

44 வயதான குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த ஆசிரியர் பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடானது, தற்போது 11 வரை அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர் நாளைய தினம் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க