மட்டக்களப்பில் திரண்ட தமிழர்கள்! வந்தது நீதிமன்ற அழைப்பாணை!

294shares

மட்டக்களப்பு – கல்வியங்காடு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட மேலும் நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுத்தாரியின் உடற்பாகங்கள் கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தற்கொலை குண்டுத்தாரியின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க