வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க வருவோருக்கு மகிழ்ச்சி செய்தி; யாழ் செல்வபவர்கள் நேரடியாக செல்லலாம்!

913shares

கட்டுநாயக்கவில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர் பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த பாதை அமைக்கப்படுவதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கொழும்பு நகருக்கு வராமல், ரயிலில் வியாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

குறித்த ரயில் பாதையொன்றை அமைக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சும் மேற்கொண்டுள்ளதாகவும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்