கிளிநொச்சியில் மஹிந்தவின் முக்கியஸ்தருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

825shares

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 5மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரை அன்மித்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பலியானவர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் தீபன் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தீபன் செலுத்திச் சென்ற கார் பேருந்து ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.