29 வருடங்களாக வீதியில் நின்று கதறும் தமிழ் உறவுகள்! நிதி வழங்க முற்படுகிறது ஸ்ரீலங்கா அரசு! நீதி வழங்கு சர்வதேசமே!

27shares

கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து இராணுவத்தினர் பிடித்து கொண்டு சென்ற 158 பேரின் 29 ஆண்டு நினைவு தினம் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் காணாமல் போனவர்களின் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

29 வருடங்களாக தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எமக்கான நீதியை எந்த அரசாங்கங்களும் பெற்று தரவில்லை. எமது காணாமல் போன உறவுகளுக்கு ஒரு நினைவு தூபி அமைப்பதற்கு கூட ஒரு இடம் தரவில்லை வருடா வருடம் வீதியிலேயே நின்று எமது உறவுகளை நினைவு கூறுகின்றோம் எனவும் தமது ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர்.

தற்போது எமக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபாய் தருவதாக அரசாங்க கூறியுள்ளது. நாங்கள் அரசிடம் கேட்பது நிதியல்ல நீதியைத்தான் கேட்கிறோம். எமக்கு இனியும் அரசாங்கம் நீதியை பெற்று தரும் என்று நம்பிக்கை இல்லை எமக்கு சர்வதேச விசாரணையின் ஊடாக எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேச சமூகம் பெற்று தரவேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.