இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை மக்கள் விளக்கு மாற்றால் அடிப்பது போன்ற காட்சி!

72shares

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 930 ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்ததுடன் வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்தரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளியேறு வெளியேறு வரதரே ஒரிசாவிற்கு சென்றுவிடு என்றும் கோசங்களை எழுப்பியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் ரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.