பேராதனை பல்கலைக்கழகம் செல்ல ஆசைப்படும் மகள்; யுத்த வடுக்களை தாங்கி மகளுடன் தனிமையில் வாழும் இளம் தாய்!

227shares

எமது உறவுகளுக்காக ஐபிசி தமிழ் முன்னெடுக்கும் உறவுப்பாலம் நிகழ்ச்சி - 47, இம்முறை போரின் வடுக்களை தாங்கி மகளோடு தனிமையில் வாழும் இளம் தாயின் சோகம் தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் பெரும் துயரத்தின் மத்தியில் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சியாக ஐ.பி.சி தமிழ் முன்னெடுக்கும் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடக அவர்களுடைய வாழ்வியலை தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு உதவ முன்வாருங்கள் உறவுகளே....