வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! நள்ளிரவு முதல் குறையும் விலை!

64shares

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...