யாழ்ப்பாண இளைஞனுக்கு புலம்பெயர் நாடொன்றில் ஏற்பட்டநிலை; சோகத்தில் உறவுகள்!

190shares

அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த குமார் பகீதரன் (26) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய குறித்த இளைஞன், தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரன், அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் அவரது சடலத்தை அடையாளம் காண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...