முக்கிய எட்டு அமைச்சர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட முறைப்பாடு! ( இன்றைய முக்கிய செய்திகள் )

8shares

ஊழல் தடுப்பு அமைப்பான ஸ்ரீலங்கா டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் எட்டு அமைச்சர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது.

குறித்த 8 அமைச்சர்களால் 2018/19 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்து இன்று இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

நவீன் திசாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ. ஹலீம், அகில விராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக, சஜித் பிரேமதாச, மற்றும் ரவி கருணநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மீதே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர்கள் தங்கள் சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை. எனினும் அதனை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 க்கு நிர்ணயிக்கப்பட்டது என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் பணிப்பாளர் அசோக ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்து அறிவிப்புக்களை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ .1000 அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் ஐ.பி.சி தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்