முகவரி கேட்டவேளை போலிமுடி காற்றில் பறந்ததால் வந்தது வில்லங்கம்!

55shares

அழகுக்கலை நிலையமொன்றுக்குச் சென்று, தன்னைப் பெண்ணைப்போல் அலங்கரித்துக்கொண்டு, ஓட்டோவொன்றைச் செலுத்திச் சென்ற இளைஞரொருவர் அக்மீமன- குருந்துவத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்துக்கு வருகை தந்து, முகவரி ஒன்று தொடர்பில் கேட்டபோது, அவர் தலையில் வைத்திருந்த போலி முடி காற்றில் பறந்துள்ளது.

இதனையடுத்து, இவர் மீது சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்ணொருவரைச் சந்திப்பதற்காகவே பெண் வேடமணிந்து வந்ததாக, சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக, அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...