பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்!

40shares

நாட்டில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் ஐம்பது வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தனியார் பேருந்து சங்க உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன.

இந்த நிலைமை பேருந்து தொழிலிலேயே பெரும் சரிவை ஏற்படுத்தியு்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் கஞ்சாவுக்கே அடிமையாகி இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஐஸ் என்ற போதைப்பொருளுக்கு அடிமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

‘சஹாசரா’ திட்டத்தை செயல்படுத்தத் தவறியதால் இந்தநிலைமை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

"நடத்துநர்களும் சாரதிகளும் பயணிகளுக்கு மிகுதிப்பணத்தை கொடுக்காமல் கூடுதலாக பணம் சம்பாதித்தனர்,இதனால் பல நடத்துநர்கள் நாள் முடிவில் கணிசமான தொகையைச் சேகரித்தனர், அவர்கள் ஐஸ் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகப் பழகினர்," என்று அவர் கூறினார்.

"சரியான வாகன நிறுத்துமிடங்கள் மற்றும், சரியான நேர அட்டவணைகள் இல்லாதமை மற்றும் அதிக போக்குவரத்து நெருக்கடியான சூழ்நிலைகள் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தங்கள் ஆகியவையே அவர்களை போதைக்கு அடிமையாக்கும் நிலைக்கு வந்தது" என்று அவர் கூறினார்.

இதுதொடர்பான கடிதங்கள் போக்குவரத்து அமைச்சர், வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் பொலிஸ் தலைமையகங்களுக்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...