ஸ்ரீலங்காவில் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட ஜீப் ; குடும்பத்துடன் வலம் வரும் இளைஞன்!

265shares
Image

மாத்தளை கலேவெலா கல்பொக்கையாவா கிராமத்தைச் சேர்ந்த டி.எச்.எம். திரு. சிசிரா குமாரா, என்பவர் (36 வயது) ஜீப் ஒன்றினை தயாரித்துள்ளார்.

கராஜில் வேலை செய்யும் இவர் அங்கிருக்கும் சில வாகனங்களின் பழைய பொருட்கள், ரயர் பயன்படுத்தி ஜீப்பினை தயாரித்ததுடன் அதன் இயந்திரத்திரத்திற்கு மோட்டார் சைக்கிள் இன்ஜினை பயன்படுத்தியுள்ளார்.

இந்த ஜீப் 70 கி.மீற்றர் வேகத்தில் பயணிக்கும் எனவும் 5 பேர் பயணிக்க முடியும். என தெரிவித்துள்ளார். இதற்கு கிட்டத்தட்ட 55 ஆயிரம் ரூபா செலவானது எனவும் குறிப்பிட்டார்.

ஜீப்பில் கியர், பிரேக்குகள், விளக்குகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட்கள் போன்ற ஒரு வாகனத்திற்கு தேவையான அனைத்து பொருத்தப்பட்டுள்ளன.

சிறு வயதிலேயே ஹெலிகொப்டர் ஒன்று உருவாக்கினேன் , தற்போது ஒரு சிறிய மோட்டார் சைக்கிள் இஞ்ஜின் மூலம், வாகனத்தை உருவாக்க முடிந்தது.

ஜீப்பை இப்போது யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்றும், அரசாங்கம் உதவியினை மேற்கொண்டால் இப்படி வாகனங்களை தயாரிக்க முடியும் எனவும்

பதிவு எண் கிடைக்காவிட்டாலும் தனது பகுதியில் குடும்பத்துடன் பயணம் செய்வதாக அவர் கூறினார்.