அமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்; நடந்தது இதுதான்!

1223shares

உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2021இல் வெளியில் வர வேண்டிய இவர் இவ்வருடம் ஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்ஹாட்டனிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்த அமெரிக்கரான ராஜ் ராஜரத்தினம் நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.

இவர், உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தினால் 2009, அக்டோபர் 16 இல் கைது செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு மே மாதம் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 10 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் ராஜ் ராஜரத்தினத்திற்கு 53.8 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பின்படி அவர் 2021இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

ஆனால், சமீபத்தில் Kim Kardashian என்ற அமெரிக்க தொலைக்கட்சி பிரபலத்தின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்ட First Step Act என்ற சட்டத்தின்படி ராஜ் ராஜரத்தினம் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார்.

First Step Act என்ற சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டுள்ள சிலர், 60 வயதை தாண்டியவர்கள் அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீதி தண்டனைக் காலத்தை தங்கள் வீட்டிலேயே செலவிடலாம்.

நீரிழிவு பிரச்னை முற்றியதையடுத்து, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜ் ராஜரத்தினத்தின் மருத்துவர்கள், அவருக்கு விரைவில் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டியுள்ளது என பரிந்துரை செய்துள்ளதை நீதிபதி தீர்ப்பின்போது மேற்கோள் காட்டினார்.

மருத்துவர்களின் அறிக்கை, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...